தூத்துக்குடி மாவட்ட சைவவேளாளர் திருமணதகவல் அறிமுகவிழா திருச்செந்தூர் இந்து துவக்கபள்ளியில் வைத்து இன்று 6.11.22 நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்க தலைவர் AR.லெட்சுமணன் அவர்கள் தலைமை வகித்தார் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்க கௌரவதலைவர் ஆறுமுகநேரி ஜெ.சங்கரலிங்கம் பிள்ளை அவர்கள் இந்து துவக்க பள்ளி நிர்வாகி ராஜமாதங்கன் அவர்கள் திருச்செந்தூர் சைவவேளாளர் சங்க செயலாளர் S.வெங்கடாசலம் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் திருமணதகவல் அமைப்பாளர் APK.பாலன் அவர்கள் வரவேற்புரையாற்றினார் திருமண தகவல் வரன் பதிவை முன்னாள் மண்டல செயலாளர் S.பரமேஸ்வரன் அவர்கள் துவக்கி வைத்தார் வரன் விபரங்கள் மலரை தமிழ்நாடு சைவவேளாளர் இளைஞர்பேரவை மாநில அமைப்பாளர் S.குற்றாலிங்கம் அவர்கள் வெளியிட மதுரை ஆறுமுகம் தம்பதியினர் பெற்றுக்கொண்டனர் சிறப்பு விருந்தினர் ஆக வருகை தந்து சிறப்பித்த மாநில இளைஞர்பேரவை அமைப்பாளர் S.குற்றாலிங்கம் அவர்களுக்கு திருச்செந்தூர் சைவவேளாளர் சங்க தலைவர் ஆணந்தராமச்சந்திரன் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார் திருமணதகவல் விழாவுக்கு உறுதுணையாக இருந்து நல் ஆதரவு வழங்கிவரும் இந்து துவக்க பள்ளி நிர்வாகி ராஜமாதங்கன் அவர்களுக்கு மாநில இளைஞர்பேரவை அமைப்பாளர் S.குற்றாலிங்கம் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார் லரன்களின் விபரங்களை தகவல் தொடர்பாளர் முருகன்பிள்ளை துனை அமைப்பாளர் தேவி இரா.கணேஷ் மாவட்ட இளைஞர் பேரவை துணைசெயலாளர் டைல்ஸ் மகராஜன் சைவமுரசு இரா.சொக்கலிங்கம் ஆகியோர் பதிவுசெய்தனர் திருமணதகவல் பணி மற்றும் செயல்பாடுகளை மாவட்ட இளைஞர்பேரவை தலைவர் திருமணதகவல் துணை அமைப்பாளர் குரும்பூர் ராம்குமார் மக்களுக்கு விளக்க உரையாற்றினார் விழாவில் மாவட்ட துணைதலைவர் காயல் உமாபதி இனைசெயலாளர் எட்டயபுரம் சண்முகவேல் நிர்வாக துணைதலைவர் இசக்கிமுத்து திருச்செந்தூர் சைவவேளாளர் சங்க பொருளாளர் பொண்முருகேசன் முன்னாள் செயலாளர் சந்தணராஜ் மாவட்ட வ.உ.சி.பேரவை துணைதலைவர் சுபா.S.சுந்தர் துணைசெயலாளர் செந்தூர் துர்கா இளைஞர்பேரவை K.சிவா மாவட்ட இளைஞர்பேரவை துணை செயலாளர்கள் செந்தூர் மணிகண்டன் ஆத்தூர் ஆர்யசுந்தர் அம்மன்புரம் முருகன் வ.உ.சி.தெரு கமிட்டி செண்பகராஜ் . KTC.ஞாணமூர்த்தி வ.உ.சி.பேரவை ப.ராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர் விழா ஏற்பாடுகளை மாவட்ட துணைதலைவர் SR.ராமன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அங்கமங்கலம் கோமதிநாயகம் திருமணதகவல் தொடர்பாளர் காயல்.கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்க பொருளாளர் அ.குப்புசாமி நன்றி தெரிவித்தார்
தமிழ்நாடு சைவ வேளாளர் கன்னியாகுமரி மாவட்ட சங்கம் 39வது ஆண்டு விழா சைவ குடும்ப சங்கம விழா மற்றும் இராமலிங்க அடிகளாரின்ன 200வது அவதார ஆண்டு விழா 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவில் வடிவீஸ்வரம் பிராமணாள் சமுதாய திருமண மண்டபத்தில் காலை 9 மணி அளவில் இறைவணக்கத்துடன் பொதுக்குழு துவங்கியது. செயலாளர் சைவத்திரு. P.இராமசாமி அவர்கள் முந்தைய ஆண்டுக்கான சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். அடுத்து பொருளாளர் சைவத்திரு.S.ஐயப்பன் அவர்கள் நிதிநிலை அறிக்கை வாசித்து பொதுக்குழுவின் ஒப்புதல் பெற்றார்கள். அடுத்த மூன்றாண்டு களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
காலை 10 மணி அளவில் செல்வி. E.நாகேஸ்வரியின் சிவநடனத்துடன் ஆண்டுவிழா இனிதே தொடங்கி யது. மறைந்த நம்மின பெரியோர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. செல்வன் மகேஷ் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் மாநில இளைஞரணி அமைப்பாளர் சைவத்திரு.S.குற்றாலிங்கம் அவர்கள் நம்மின மக்களின் மேம்பாடு குறித்து சிறப்புரை வழங்கினார்கள். பெருங்குளம் செங்கோல் ஆதீன 103வது சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகளை செல்வி.S.கிருஷ்ணலீலா அவையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். பின் சுவாமிகள் 80 அகவை நிரம்பிய சதாபிஷேக தம்பதிகளை வாழ்த்தி ஆசிவழங்கினார்கள். அடுத்து சதாபிஷேக பெரியவர்கள் ஆசி பெறும்/ வழங்கும் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது. அரங்கத்தில் இருந்த அனைவரும் மேடையிலிருந்த ஆதினசுவாமியிடமும் சதாபிஷேக பெரியவரகளிடமும் பாதங்களை வணஙகி ஆசி பெற்றார்கள். மதிய விருந்துடன் காலை நிகழ்வுகள் நிறைவு பெற்றது. மாலை முனைவர் KLS கீதா அவர்கள் வள்ளலாரும் மகளிரும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் தலைவர் உரையில் சுதந்திர தின பவள விழா ஆண்டில் தற்சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறினார்கள். சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட எண்ணற்ற தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து நம் குழந்தைகள் எந்த சூழலிலும் இறை உணர்வுடன் கல்வி கற்றால் வாழ்வில் உன்னத நிலையை அடையலாம் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார் பின் சங்கத்தைப் பற்றிய பொதுவான விசயங்கள் குறித்து பேசினார்கள். 10, 12 வகுப்புகள் State board மற்றும் CBSE வகுப்பு களில் முன்னிலை வகித்த மாணவ மாணவியற்கு ரூ60000/ ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நம்மில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 14 மாணவ மாணவிகளுக்கு ரூ 5000/ வீதம் உதவித்தொகை வழங்க முடிவு செய்ததின் அடிப்படையில் 11 மாணவர்கள் ஆண்டு விழா வின்போது உதவித்தொகை பெற்றார்கள். மூவருக்கு கல்லூரியில் சேர்ந்தவுடன் நிதி வழங்கப்படும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் நிகழ்ச்சி தொத்து வழங்கிய குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் ஸவழங்கப்பட்டது. செயலாளர் சைவத்திருP.இராமசாமி அவர்கள் நன்றி கூற விழா தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது.
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட பொன்விழா 50வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழா தலைவர் கே எல் எஸ் நடராஜன் மாவட்ட செயலாளர்கண்ணன் மாவட்ட பொருளாளர் கயிலை மணி ராமமூர்த்தி கல்வி நல திட்ட குழு தலைவர் அருமைச் சகோதரர் சிவராமன் ஆகியோர்சிறப்புடன் நடைபெற்ற விழாவிற்கான ஏற்பாடுகளை திறம்படச் செய்திருந்தனர்.நமது சைவ இன குல கொழுந்துகள் திருவிளக்கேற்றசென்னிமலை கே டி எஸ் சுப்பிரமணியன் அவர்கள் தேவார இசை பாட உலகத் தமிழ் சைவ பெருமக்கள் சங்க நிறுவனர் அன்புச் சகோதரர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சிறந்த உரையாற்ற நகைச்சுவை மன்னன் நல்லதம்பி திண்டுக்கல் அவர்கள் தமக்கே உரிய பாணியில் நகைச்சுவை தரும் உரையாற்றி மற்றும் மாநில நிர்வாக தலைவர் சுப்புமாணிக்கவாசகம்
மாநில பொருளாளர் செண்பகம் மாநில மண்டல செயலாளர் ஆடிட்டர் நாராயணன் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தூத்துக்குடி குற்றாலிங்கம் தென்காசி மாவட்டத் துணைச் செயலாளர் ஐயம்பெருமாள் ஈரோடு மாவட்டத்தின் ஈடு இணையில்லா நம் இன முன்னோடிஉயர்திரு கேசவானந்தம் அவர்கள்(வெகு காலத்திற்கு முன்பே இவர்களது குடும்பம்ஈரோடு புகைவண்டி நிலையத்திற்கு தானமாக இடம் வழங்கியது டம் மிகவும் போற்றத்தகுந்த குடும்பம் என்பதுநம்மின நல்லோர்கள் எண்ணி பெருமிதம் கொள்ளக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது) புதிதாக மாநில சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டதலைவர் பிச்சமுத்து சண்முகசுந்தரம் மாசிலாமணி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்க பொன்விழா எழுச்சி உரை மாநில பொதுச் செயலாளர் சட்ட மாமேதை என் கனகசபாபதி பி எஸ் சி பி எல் அவர்கள் வழங்க பொன்விழா பேருரை மதிப்புக்குரிய மாநில தலைவர் பண்ணை டி சொக்கலிங்கம் அவர்களால்சிறப்புற வழங்கப்பட்டு மாவட்டத் துணைத் தலைவர் கருப்பையா அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு விழா இனிதே நடந்தேறியது. விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய நம் இன பெண்மணிகளுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் மிகுந்த மனிதாபிமானம் நிறை மனிதநேய பண்பாளர் பெயருக்கேற்ற நன் உள்ளங்கொண்ட மகாராஜன் அவர்களின் இனிய மதிய உணவு மனம் நிறையச் செய்தது. ஈரோடு மாவட்ட தலைவர் கே எல் எஸ் நடராஜன் அவர்களின் அருமை புதல்வர் ராஜபாண்டி அவர்களின்ஈரோடு மாவட்டத்தின் புகழ்தனைபறைசாற்றும் காணொளி காட்சி மனம் நிறைந்தது மிகவும் போற்றத்தக்கது. நன்றியுடன் உ.சுப்பு மாணிக்கவாசகம் மாநில நிர்வாக தலைவர் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சுரண்டை.
சென்னை வ.உ.சி.நற்பணி மன்றம் சைவ வேளாளர் சங்கம் சார்பில் 07.08.2022 தேதியில் சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில் APK.பாலன் அவர்களுக்கு வ.உ.சி.விருது வழங்கப்பட்டது. மிக சாதாரண நபராகிய என்னை தியாகச் செம்மல் ஐயா வ.உ.சி.அவர்கள் திருப்பெயரிலான வ.உ.சி.விருது இவ்விருதுக்கு தேர்வு செய்த சென்னை சைவவேளாளர் சங்கம் மற்றும் சென்னை வ.உ.சி.நற்பணி மன்றத்தின் தலைவர் சைவத்திரு A.ராஜ்குமார் M.A.அவர்களுக்கும் விருது வழங்கி சிறப்பித்த VIT.பல்கலை கழக வேந்தர் Dr G.விஸ்வநாதன் அவர்களுக்கும் நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்த தூத்துக்குடி நெல்லை தென்காசி மதுரை திண்டுக்கல் ராஜபாளையம் சென்னை மாவட்ட சைவவேளாளர் சங்க நிர்வாகிகள் திருமணதகவல் மன்ற அமைப்பாளர்கள்
மற்றும் எனது பாசமிகு தூத்துக்குடி மாவட்ட அனைத்து 61 கிளை சங்க நிர்வாகிகள் மாவட்ட சங்க நிர்வாகிகள் வாட்சப் குழு உறவுகள் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த நன்றி மகிழ்ச்சி மிகு வணக்கங்கள் APK.பாலன் மாவட்ட செயலாளர் அமைப்பாளர் சைவவேளாளர் திருமணதகவல் மன்றம் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அனைத்து சார்பு அமைப்புகள் உலகில் பிறந்ததற்கான பயன்... வெற்றியோடும், மகிழ்ச்சியோடும், பிறரின் வாழ்த்துக்களுடன் வாழ்வதற்கே..!