தமிழ்நாட்டில் பல்வேறு இன மக்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்தாலும் சைவ வேளாளர் என்ற இனம் புராணகாலத்தில் தோன்றியது என்பர். தென்னாடுடைய சிவனே போற்றி !எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்று சைவர்கள் இறைவன் புகழ் பாடிய காரணத்தால் தென்பகுதியில் தான் பக்தி மார்க்கம் தோன்றி வளர்ந்தது என்பர். அதைப்போல தென் தமிழகம்தான் வேளாளர்களின் பூர்வீகம் என்றும், அவர்கள் வேலை தேடி பல பாகங்களுக்கும் சென்று வாழும்போது பிள்ளைமார் என்று தங்களை அழைத்துக் கொண்டு பண்பாட்டை வளர்த்தார்கள். கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ,தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வாழ்ந்த வேளாளர்கள் தங்களை சைவப் பிள்ளைமார் என்று அடையாளத்தோடு வளர்ந்தனர்
சைவப்பிள்ளை :
பிள்ளை என்று எப்படி பெயர் வந்தது. இதற்கு புராண வரலாறு உண்டு. ஒருமுறை பார்வதிதேவி காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்பிகையாக மாறி சிவபெருமானை பூஜை செய்கின்ற போது, பெருமானிடம் இருந்து இரண்டு மரக்கால் நெல் பெற்றார் .அப்போது விவசாயம் செய்து வந்த வேளாளர்களை அழைத்து இந்த நெல்லை கொடுத்து பயிரிட்டு, வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் நெல் மூடைகளை வைத்து நாட்டிலே 32 அறச் செயல்களை செய்யுங்கள் என்று கூற அதன்படியே வேளாளர்களும் செய்ய நாடு சுபீட்சமானது .அம்பிகை உள்ளம் மகிழ்ந்து பிள்ளைகளே உங்கள் உழைப்பை மெச்சுகிறேன். நீங்கள் தென்பகுதியில் உள்ள வேளாளர்களோடு இணைந்து மேலும் அறப்பணிகளை செய்யுங்கள். அவர்கள் அனைவரும் பிள்ளைமார் என்று அன்போடு அழைக்கப்படுவார் என்று கூறி வாழ்த்தினார் என்று புராண சாரத் திரட்டு என்னும் நூல் கூறுகிறது .வேளாண்மை செய்பவர் வேளாளர். வேளாளர் என்றால் ஈகையுடையவர் . மற்ற உயிர்களுக்கு ஏன் விலங்கு ,பறவைகளுக்கு கூட தீங்கு செய்யாதவர்கள் .அன்பே சிவம் என்பதை நினைவில் கொண்டு சிவ வழிபாடு செய்த காரணத்தால் சைவ வேளாளர்கள் என்றும் , சைவ பிள்ளைமார் என்றும் அழைக்கப்பட்டனர். பிற்காலத்தில் அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டு உட்பிரிவுகள் தோன்றியது.
சைவ பிள்ளை |
கார்கார்த்தார் |
பண்டாரகத்தார் |
குருக்கள் |
கவிராயர் |
கருணீகர் |
காணியாளர் |
சைவ செட்டியார் |
சைவ முதலியார் |
தேசிகர் |
ஓதுவார் |
சைவ நயினார் |
ஓ. ப. சி. வேளாளர் |
சைவ செட்டியார்: வேளாளர்களில் வியாபாரம் செய்வோர் செட்டியார் எனப்பட்டனர்.
சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள்
சைவ வேளாளர் (பிள்ளை) |
தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் |
தொண்டை மண்டல சைவ வேளாளர் |
சைவ குருக்கள் |
சைவ ஓதுவார் |
சைவ தேசிகர் |
சைவ கவிராயர் |
சைவ காணியாளர் |
சைவ செட்டியார் |
தொண்டை மண்டல சைவ வெள்ளாள நயினார் |
ஓபா. சி. வேளாளர் |