பெருங்குளம் செங்கோல் ஆதீனம் என்பது தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் அமைத்துள்ள சைவ மடமாகும். இந்த ஆதீனம் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் வழங்கக்கூடிய உரிமையைப் பெற்று வந்ததால் இந்த ஆதீனத்திற்கு செங்கோல் ஆதீனம் என பெயர் பெற்றது.