காஞ்சிபுரம் பரமசிவன் தெருவில் பழமை வாய்ந்த தொண்டைமண்டல ஆதீனம் ஞானபிரகாச மடம் உள்ளது. இந்த மடத்தின் 233-வது மடாதிபதியாக ஜி.நடராஜன் பதவியேற்றார். இவர் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிய ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இவர் 2021 மார்ச் 5ல் பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான மடங்களில் ஒன்று தொண்டை மண்டல ஆதீன திருமடம். இந்த மடத்தின் 232-வது குருமகா சந்நிதானமாக இருந்து வந்த பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிச. 2-ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து 233-வது குருமகா சந்நிதானத்தை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக 13 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மடாதிபதியை தேர்வு செய்யும் நிகழ்வு சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருமட வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஜி.நடராஜன் மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
மடத்தின் நிர்வாக குழு உறுப்பினராக ஐந்து பேர் உள்ளனர். அவர்களின் ஆலோசனைபடி மடம் இயங்குகிறது.
மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றார். தருமபுர ஆதீன மடத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் தலைமையில் பொறுப்பேற்றார். இவர் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் என்ற பெயரில் அழைக்கப்படுவார். இவர் மடத்தில் உள்ள தெய்வங்களுக்கு பூஜைகளை செய்தார். தற்போது 76 வயதாகும் இவர் கடந்த 1969-ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.