தருமபுர ஆதீன பரம்பர

 

தருமபுர ஆதீன பரம்பரையைத் 'திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்' எனப் போற்றுகின்றனர். இதன் பரம்பரையில் வரும் முதல் நால்வரைப் அகச் சந்தான குரவர் என்றும் கயிலாயவாசிகள் என்றும் கூறுவர். இப்பரம்பரை அகச் சந்தான குரவர் புறச் சந்தானக் குரவர் மற்றும் சந்தானக் குரவர் என வரிசைப்படுத்தப்படுகிறது.

குருவைக் குறிக்கும் மற்றொரு சொல் குரவர். பொதுவாக குருமார் துறவியர். அவர்களுக்கு மகப்பேறு இல்லை. எனவே அடுத்த குரவரை தலைமைக் குரவரே தேர்ந்தடுப்பார். இப்படித் தத்துப்பிள்ளை போல் தேர்ந்தெடுக்கப்படும் குரவரைச் சந்தான குரவர் என்பர்.

ஆதீன நிறுவனர் குருஞான சம்பந்தருடன் சேர்த்து இதுவரை 27 பேர் ஆதீனத்தின் தலைமை பொறுப்பை அலங்கரித்துள்ளனர். அவர்களின் பட்டியல் கீழே

தருமபுர ஆதீன குருமரபு அட்டவணைே

எண் பெயர் குறிப்பு
1 ஸ்ரீ குருஞானசம்பந்த குருமூர்த்திகள் ஆதீன நிறுவனர்
2 ஸ்ரீலஸ்ரீ ஆனந்தபரவச தேசிகர் குருஞானசம்பந்த ஸ்வாமிகள் முக்திக்கு பின் இரண்டாவதாக தலைமை பொறுப்பேற்ற இவர், தலைமை ஏற்ற அன்றே முக்தி பெற்றார்
3 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
4 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் பெருந் தமிழ்ப் புலவரான குமரகுருபரர் இவரது சீடர் ஆவார். இவரது கட்டளைப்படியே குமரகுருபரர் காசிக்கு சென்று குமாரசாமி மடத்தை நிறுவினார். பின்னாளில் அதன் தலைமையிடம் திருப்பனந்தாளுக்கு மாற்றப்பட்டு திருப்பனந்தாள் காசிமடமாக என்ற பெயரில் செயல்படுகிறது. இவர் மேல் கொண்ட பக்தியால் பண்டார மும்மணி கோவை என்றொரு மும்மணி கோவையை குமரகுருபரர் இயற்றினார். முதுமொழிமேல் வைப்பு நூலின் ஆசிரியர் வெள்ளியம்பலவாண முனிவரும் இவரது மாணாக்கரே
5 ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
6 ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த தேசிகர்
7 ஸ்ரீலஸ்ரீ திருவம்பல தேசிகர்
8 ஸ்ரீலஸ்ரீ அழகிய திருச்சிற்றம்பல தேசிகர்
9 ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகர் சித்தாந்த நிச்சயம் என்றொரு சரித்திர நூல் இவர்களால் இயற்றப்பட்டது
10 ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
11 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
12 ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தேசிகர்
13 ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
14 ஸ்ரீலஸ்ரீ கந்தப்ப தேசிகர்
15 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர்
16 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
17 ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
18 ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
19 ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
20 ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
21ை ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
22 ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
23 ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் 30-10-1923 முதல் 26.06.1933 வரை
24 ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிகர் இவரது ஆட்சிக்காலத்தில் சிவாகம பாடசாலை, தேவார பாடசாலை, குருஞானசம்பந்தர் துவக்கப்பள்ளி, ஞானசம்பந்தம் மாத இதழ் முதலியன துவங்கப்பட்டன. காலம் - 26.06.1933 முதல் 20.05.1945 வரை
25 ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் காலம் - 20.05.1945 முதல் 10.11.1971 வரை
26 ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் காலம் - 10.11.1971 முதல் 03.12.2019 வரை
27 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் காலம் - 13.12.2019 முதல் தற்போது வரை
 
Go Back